Budget

மாநில அரசின் நிதி கையிருப்பு  RM371 கோடியாகும்

ஷா ஆலம், நவ 10: மாநில அரசின் நிதியின் மொத்த கையிருப்பு தொகை இந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி வரை RM371 கோடியாக தொடர்ந்து வலுவாகவும் நிலையானதாகவும் உள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது RM631.48  63.14 கோடி அதிகரித்துள்ளதாக விளக்கினார். ஒருங்கிணைந்த வருவாய் கணக்கு RM149 கோடி மற்றும் ஒருங்கிணைந்த அறக்கட்டளை கணக்கு RM221 கோடி ஆகியவற்றை உள்ளடக்கியது என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பயனுள்ள மற்றும் விவேகமான செலவின அணுகுமுறை மற்றும் மூலோபாயத்தைப் பயன்படுத்தி, அந்தக் காலகட்டம் வரையிலான மாநிலத்தின் நிதிச் செயல் திறனும் RM42.725  கோடி  நிதி உபரியைப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

“குறிப்பாக, நவம்பர் 9 வரையிலான மாநில வருவாய் வசூல் RM240 கோடி  85.97 சதவீதம் அல்லது RM111 கோடி  இயக்க செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

“மேலும், 72.05 சதவிகிதம் அல்லது  RM86.45 கோடி வளர்ச்சிச் செலவினங்களுக்காப் பயன்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று சிலாங்கூர் பட்ஜெட் 2024 ஐ சமர்ப்பிக்கும் போது கூறினார்.

மாநில நிர்வாகம் 2023 ஆம் ஆண்டுக்கான நிதிப்பற்றாக் குறையை RM 49.5 கோடியிலிருந்து குறைக்க முடியும் என்றும் அமிருடின் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், நவம்பர் 9 ஆம் தேதியின்படி மாநில வருவாய் வசூல் RM240.5 கோடியை எட்டியுள்ளது. இது 2023இன் வருவாய் மதிப்பீட்டான RM200  கோடி அல்லது 120 சதவீதத்திற்கு மேல் வசூலுக்கு சமமானதாகும்


Pengarang :