Budget

வெ.10 லட்சம் நிதி ஒதுக்கீட்டுடன் சட்ட உதவி மையத் திட்டம் அடுத்தாண்டும் தொடரும்

ஷா ஆலம், நவ 10- மாநில அரசின் சட்ட உதவி மையத் திட்டத்தை
அடுத்தாண்டிலும் தொடர மாநில அரசு 10 லட்சம் வெள்ளியை
ஒதுக்கியுள்ளது.

இந்த திட்ட உதவி திருமண மற்றும் இல்லற சிக்கல்கள் தொடர்பான
ஷரியா நீதிமன்ற வழக்குகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1,500 வெள்ளித் தொகை
வழக்குகளைப் பதிவு செய்து உள்ளிட்ட பணிகளுக்குத் தேவைப்படும்
செலவினங்களை ஈடு செய்வதற்கு போதுமானது அல்ல என்பதை மாநில
அரசு உணர்ந்துள்தாக மாநில சட்டமன்றத்தில் இன்று 2024ஆம்
ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர்
குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் இந்த சட்ட உதவி நிதியை 3,000 வெள்ளியாக
மாநில அரசு உயர்த்தவிருக்கிறது. இந்த உதவியைப் பெறுவதற்கான
குடும்ப வருமான வரம்பை 3,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாகவும்
அது உயர்த்தவிருக்கிறது என்று அவர் சொன்னார்.


Pengarang :