Budget

பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் திட்டத்திற்கு 1.64 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 10 – பெருநாள் கால ஜோம் ஷோப்பிங் திட்டத்திற்கு மாநில
அரசு அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 1 கோடியே 64 லட்சத்து 80
ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

சுமார் 82,400 வசதி குறைந்தவர்களை இலக்காகக் கொண்டு இந்த பெருநாள்
கால இலவசப் பற்றுச் சீட்டுத் திட்டம் அடுத்தாண்டிலும் தொடரும் என்று
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நோன்புப் பெருநாள், சீனப்புத்தாண்டு மற்றும் தீபாவளியின் போது வசதி
குறைந்தவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் அத்தியாவசியப்
பொருள்களை வாங்குவதற்கான இலவசப் பற்றுச் சீட்டுகளை வழங்கும்
திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்திற்கான பற்றுச் சீட்டின் மதிப்பை மாநில அரசு கடந்த
2023ஆம் ஆண்டு முதல் 200 வெள்ளியாக உயர்த்தியுள்ளதாக இன்று மாநில
சட்டமன்றத்தில் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத்
தாக்கல் செய்தபோது அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு தகுதி பெறுவதற்கான வருமானம் வரம்பு மாதம் 2,000
வெள்ளியிலிருந்து 3,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்
சொன்னார்.


Pengarang :