Budget

கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குப் புத்துயிரூட்ட சிறப்புக் குழு

ஷா ஆலம், நவ 10 – கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குப்
புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய
கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்ட புத்துயிர் செயல்குழுவை (ஜே.பி.பி.டி.)
அமைக்கிறது.

வீடமைப்புத் திட்டங்கள் கைவிடப்படும் விவகாரத்திற்கு தீர்வு காணும்
கடப்பாட்டை சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை
வாரியம் கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

இந்நோக்கத்தின் அடிப்படையில் மாநில அரசின் வாயிலாக அவ்வாரியம்
கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்ட புத்துயிர் செயல்குழுவை
அமைத்துள்ளது என்று மாநில சட்டமன்றத்தில் இன்று 2024ஆம்
ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது
குறிப்பிட்டார்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 36,342 வீடுகளை உள்ளடக்கிய 178
வீடமைப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டதாக அவர் கூறினார். மாநில
அரசின் அரிய முயற்சியால் 39,476 வீடுகளைக் கொண்ட 101 வீடமைப்புத்
திட்டங்களுக்கு புத்துயிரூட்டப்பட்டது என்றார்.


Pengarang :