Budget

சிலாங்கூரில் சுற்றுலா  மேம்பாட்டுக்கு  முக்கியத்துவம்

ஷா ஆலம், நவ 10: சிலாங்கூருக்கு விஜயம் செய்வீர் ஆண்டு 2025 ன் வெற்றிக்கான  ஏற்பாட்டில்  அடுத்தாண்டு சிலாங்கூரை மலேசியாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்த பல முயற்சிகள் தொடங்கப்படும்  என மந்திரி புசார் இன்றைய வரவு செலவு திட்டத்தில்  குறிப்பிட்டார்.
முதலாவதாக, சிலாங்கூர் மாநிலத்தை  முக்கிய சுற்றுலா தலமாக  விளம்பரப்படுத்த  ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை  ஊக்குவிப்பது. அதற்கு ஏற்ப  பயணிகளுக்கு  இம்மாநிலத்தின்   சிறப்பு சுற்றுலா கவர்ச்சிகளை  மேம்படுத்தி அவர்கள் அறிய செய்வது ஆகும்.
இரண்டாவதாகக் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் மற்றும் சுபாங் விமான நிலையத்தில் இறங்கும் வருகையாளர்களைப் பயன்படுத்தி, அவர்கள் மற்ற மாநிலங்களுக்குச் செல்வதற்கு முன், சிலாங்கூர் ஒரு நிறுத்தமாக மட்டுமில்லாமல் , இங்கே உள்ள  கவர்ச்சிகளைக்  கண்டுகளிக்க  சிறப்பு  ஏற்பாடுகள் செய்வதும் ஒன்றாகும்.

சுற்று பயண பேக்கேஜ்  நிறுவனங்களுடன்  இணைந்து ‘பூசிங் சிலாங்கூர் டூலு’ பிரச்சாரம் முக்கிய பிரச்சாரமாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாகச், சபாக் பெர்ணம் மாவட்டம் முதல் கோலா சிலாங்கூர் வரையிலான வடக்கு தாழ்வாரம் மற்றும் சிப்பாங் மற்றும்  கோலா லங்காட் மாவட்டங்களில் உள்ள தெற்கு தாழ்வாரம் போன்ற சிலாங்கூரின் சிறப்புமிக்க  கவர்ச்சிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு வாய்ப்புகளையும்  கண்டறிவதாகும்.


Pengarang :