Budget

அடுத்த ஆண்டு RM10.8 கோடி  ஒதுக்கீட்டில் பிங்காஸ் உதவி திட்டம் தொடரும்

ஷா ஆலம், நவ. 10: மக்களின் சுமையைக் குறைக்க வருடத்திற்கு RM3,600 வழங்கும் இளம் தாய்மார்களுக்கு  உதவும் திட்டமான   பிங்காஸ் அடுத்த ஆண்டு RM10.8   கோடி ஒதுக்கீட்டில் தொடரும்.

இ-வாலட் மூலம் மாதந்தோறும் வழங்கப்படும் ரிங்கிட் 300 உதவியானது 30,000 குடும்பங்கள் குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் உட்பட அடிப்படைத் தேவைகளை வாங்குவதற்குப் பயனளிக்கிறது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இந்த மாநிலத்தில் பொருளாதாரச் சவால்களால் பாதிக்கப் பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவிகளை அதிகரிக்க வேண்டியதன் காரணமாக இந்த திட்டம் தொடர்கிறது” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சிலாங்கூர் பட்ஜெட் 2024 ஐ இங்கு தாக்கல் செய்தபோது கூறினார்.

பிங்காஸ் மூலம், ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு RM300 அல்லது வருடத்திற்கு RM3,600 உதவியைப் பெறுவார்கள் மற்றும் பெறுநருக்குச் செலவு செய்வதை எளிதாக்குவதற்காக Wavpay இ-வாலட் செயலி மூலம் பணம் விநியோகிக்கப்படும்.

அதே வேளையில் அடுத்த ஆண்டு வறுமை ஒழிப்பு உதவித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக 2.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

“2023ல் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 334 உதவி பெறுநர்கள் இதனால்  நன்மைகள் பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டு உபகரணங்கள் அல்லது இயந்திரங்கள் வடிவில் இவ் உதவித் திட்டத்தைத் தொடர அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

“மேலும், உதவி பெறுபவர்களின் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்த உதவும் வகையில் புளூபிரிண்ட் கார்னிவல் நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.


Pengarang :