Budget

சிலாங்கூர் கித்தா ரயில் பாதையை மேம்படுத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது

ஷா ஆலம், நவ 10: சிலாங்கூர் மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், மாநிலத்தின் மேற்குக் கடற்கரையில் சிலாங்கூர் கித்தா ரயில் பாதையை மேம்படுத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது.

கிள்ளானில் இருந்து கோலா சிலாங்கூர், தஞ்சோங் காராங் மற்றும் சபாக் பெர்ணம் வரையிலான ரயில் சேவை தொடங்கும் என்றும், குவாங்கில் இருந்து கோலா சிலாங்கூர் வரை இன்னும் கட்டப் படாதப் பாதையின் சாத்தியக்கூறுகள் ஆராயப் படுவதாகவும் டத்தோ மந்திரி புசார் கூறினார்.

இத்திட்டம் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, RM3 மில்லியன் ஒதுக்கீட்டில் சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் தொடங்கப்படும் என்றார்.

“மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள கித்தா சிலாங்கூர் ரயில் பாதை காப்பார், ஜெராம், கோலா சிலாங்கூர், தஞ்சோங் காராங், சிக்கிஞ்சான், சபாக் ஆகிய பகுதிகளை பேராக் எல்லை வரை மேம்படுத்தலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

ரயில் பாதை அமைப்பதுடன், பொதுப் பேருந்து, வேன் சேவைகள் மற்றும் பாதசாரி வழிகளையும் மாநில அரசு மேம்படுத்தும் என்று அமிருடின் மேலும் கூறினார்.

மக்களின் தேவைக்கேற்ப சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் மற்றும் வேன் சேவைகள் (டிஆர்டி) அனைத்து அடுத்த ஆண்டு ரிங்கிட் 5 மில்லியன் ஒதுக்கீடு மூலம் பலப்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.

ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) செயல்படுத்தும் ஒரு முன்னோடித் திட்டத்தின் மூலம் காற்றோட்டம் செயல்பாடுகள் மற்றும் சோலார் விளக்குகள் கொண்ட பாதுகாப்பான மற்றும் வசதியான நடைபாதை அடுத்த ஆண்டு கட்டப்படும் என்று அமிருடின் கூறினார்.

” RM3 மில்லியன் ஒதுக்கீட்டில் சுல்தான் சலாவுடின் அப்துல் அஜீஸ் ஷா கட்டடத்திலிருந்து ஷா ஆலம் நகரத்திற்கு நடைபாதை பாதை கட்டப்படும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :