NATIONAL

உயர்கல்வி மாணவர்களுக்கான ரொக்க உதவித் திட்டத்தைச் சிலாங்கூர் அரசு தொடரும்

ஷா ஆலம், நவ 11 – பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பைத் தொடரும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு  1,000 வெள்ளி ரொக்க ஊக்கத்தொகை வழங்கும் திடடம் அடுத்தாண்டும் தொடரும்.

முப்பது லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் அமல்படுத்தப்படும் இந்த உயர் கலவி நிறுவன நுழைவு வெகுமதி திட்டம், 5,000 வெள்ளி மற்றும் அதற்கும் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநில உபகாரச் சம்பளத் திட்டத்தை  90 லட்சம் வெள்ளி நிதியில்   தொடர  மாநில அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதில் மாநில அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது. சிலாங்கூர் மாநிலப் பிள்ளைகள் உயர்தரம் கொண்ட உலகப் பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பைத் தொடர்வதை இது உறுதிப்படுத்துகிறது என்றார் அவர்.

நேற்று மாநில சட்டமன்றத்தில்  2024ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அவர் இதனைத் நெரிவித்தார்

கடனுதவி மற்றும் உபகாரச் சம்பளத்  திட்டங்கள் வாயிலாக கடந்த  1985 முதல் இவ்வாண்டு  செப்டம்பர் வரை சுமார் 29,199 மாணவர்கள்  பயனடைந்துள்ளனர்.

பாயு எனப்படும் உயர்கல்வி அடிப்படை கல்விக்கட்டணத் திட்டம் வழியாக வரும் ஆண்டில் 2,500 மாணவர்களுக்கு உதவ மாநில அரசு விரும்புவதாக அமிருடின் கூறினார்.

இந்த முயற்சி குறைந்த வருமானம் பெறும்  B40, நடுத்தர வருமானம் பெறும் எம்40   மற்றும் மாதம் 2,500 வெள்ளிக்கும் கீழ் வருமானம் பெறும் பி10  குடும்பங்களுக்குப் பெரிதும் உதவும் என்றார் அவர்.


Pengarang :