Budget

கிள்ளானிலிருந்து குழாய்  நீர் அமைப்பு புலாவ் இண்டாவுடன் இணைக்கப்படும் – 30 கோடி ரிங்கிட் செலவில்

ஷா ஆலம், நவ 11: கிள்ளானிலிருந்து குழாய் நீர்  அமைப்பு புலாவ் இண்டாவுடன் இணைக்கப்படும். இதனால் தொழில்துறை பகுதி உகந்த திறனில் செயல்பட முடியும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

சுமார்  30 கோடி  ரிங்கிட் செலவிலான இது ஆயர் சிலாங்கூர் ஒரு தனியார் நிறுவனத்துடனான திட்டம் (பிஎஃப்ஐ) மாநில அரசின் துணை நிறுவனத்துடன் செயல் படுத்தும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“தரமான சாலைகள் மற்றும் அதி வேக வசதிகள் வலைத்தள இணைப்பு    தவிர முதலீட்டாளர்களுக்கு தேவைப்படும் முக்கியமான கூறுகளில் சுத்தமான நீர் மற்றும் மின்சார சேவைகளும் அடங்கும்” என்று அவர் நேற்று கூறினார்.

முதல் சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) 2021-2025 இல் சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் புலாவ் இண்டா பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தில் (ZPE SMG) சேர்க்கப்பட்டுள்ளது.

புலாவ் இண்டா மற்றும் நோர்த்போர்ட் ஆகிய இரண்டு பெரிய துறைமுகங்களின் இருப்பிடமான நீர்வழிப் பாதையைப் பயன்படுத்தி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை இது துரிதப்படுத்துகிறது.

பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தில் இரண்டு முக்கிய வளர்ச்சி மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல் மண்டலம் கிள்ளான் நகராண்மை உள்ளூர் திட்டம் 2035 இல் அங்கீகரிக்கப்பட்ட தோராயமாக 22,780 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.


இரண்டாவது மண்டலத்தில் ஷா ஆலம் மாநகராட்சி , சுபாங் ஜெயா மாநகராட்சி மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஆகிய மூன்று உள்ளூர் பிபிடிகளும் சுமார் 5,180 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளன. மதிப்பிடப்பட்ட மொத்த முதலீடு RM2.2 பில்லியன் ஆகும்.


Pengarang :