NATIONAL

பள்ளியுடன் ஆசிரியர்கள் குடியிருப்பு வசதிகள்  மேம்படுத்தப்படும்

கோலாலம்பூர், நவ 20 – தெலுபிட், சபாவில் உள்ள உலு அன்சு தேசியப் பள்ளியின் வசதிகள், பள்ளி சமூகத்தின் நல்வாழ்வுக்காக மேம்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

கல்வி மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதல் உள்ளிட்ட பிற வசதிகளை உள்ளடக்கிய கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் சமர் பணத்தின் போது நான்கு புதிய ஆசிரியர் குடியிருப்புப் பிரிவுகளை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குடியிருப்புகள் கட்டுவது உட்பட திட்டங்களின் மொத்தச் செலவு 12.5 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

“ஆசிரியர் தங்கும் வசதி பிரச்சனைக்குக் குறுகிய கால தீர்வாக, RM200,000 ஒதுக்கீட்டில் பராமரிப்பு திட்டம் நிறைவடைந்துள்ளது” என்று அமைச்சகம் கூறியது.

நவம்பர் 27 அன்று ஓய்வு பெறவுள்ள அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் ஓடோல், சபாவின் உள்பகுதியில் உள்ள தனது மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காகப் பள்ளியின் ஸ்டோர் ரூமில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்ததைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி சமூகத்தின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் கவனம் தேவைப்படும் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அணுகல் மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

– பெர்னாமா


Pengarang :