NATIONAL

இந்திய சமுதாயத்திற்கு பக்கப்பலமாக இருப்பேன்- மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் நவ 23 – அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர் என்ற முறையில் இந்திய சமுதாயத்திற்குப் பக்கப் பலமாக இருப்பேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகள் குறித்து அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக தீர்வு கண்டு வருகிறேன்.

அந்நிய தொழிலாளர்கள் இல்லாததால் பெரிதும் பரிதவித்த இந்திய உணவகங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

14 ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கிய அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கும் இன்று தீர்வு பிறந்துள்ளது.

முடித்திருத்தும் நிலையங்கள் நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் இப்போது அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

விண்ணப்பம் செய்வதில் விதிமுறைகள் கடுமையாக இருந்தாலும் அவர்களுக்கும் உதவி வருகிறோம்.

இது தவிர்த்து இந்திய சமுதாயத்தின் பல்வேறு பிரச்சனைகள் களைய தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.

இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவேட் தொழில் துறைகளில் பங்கேற்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளோம் என்றார்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று கோலாலம்பூர் லேக் கிளப்பில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :