SELANGOR

ஜோம் ஷோப்பிங் வவுச்சர் விநியோகத்தை விரிவு படுத்தும் திட்டம் பரிசீலிக்கப்படும்

ஷா ஆலம், நவ. 23: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் வவுச்சர் விநியோகத்தை விரிவுபடுத்தும் திட்டம் மாநில அரசு கூட்டத்தில் (எம்எம்கேஎன்) பரிசீலனைக்குக் கொண்டு வரப்படும்.

ஹரி ராய ஐடில்பித்ரி, சீனப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய மூன்று முக்கிய பண்டிகைகளுக்கு மட்டுமே இதுவரை வவுச்சர்கள் வழங்கப்பட்டதாக வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வி பாப்பராய்டு தெரிவித்தார்.

இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் ஜோம் ஷோப்பிங் வவுச்சர்களை அதிகமாகுவது தொடர்பாகப் பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குவா பெர்ங் ஃபீயின் கூடுதல் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

கடந்த பட்ஜெட் விளக்கக் காட்சியில், ஜோம் ஷோப்பிங் வவுச்சர் உதவித் திட்டம் RM16.48 மில்லியன் நிதியுடன் அடுத்த ஆண்டு தொடரும் என்று டத்தோ மந்திரி புசார் அறிவித்தார்.


RM200 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான வவுச்சர்கள் RM3,000 அல்லது அதற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட 82,400 குடும்பங்களை இலக்காகக் கொண்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.


Pengarang :