NATIONAL

மக்கள் பிரதிநிதிகள் ஒதுக்கீடுகளைப் பெறுவதற்குப் பிரதமரின் நிர்வாகத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை

ஷா ஆலம், நவ. 28: எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கு பிரதமரின் நிர்வாகத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மறுபுறம், எந்தவொரு ஜனநாயக அமைப்பிலும் நடைமுறையில் உள்ளது போல் எதிர்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

“மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகளை நான் தடுக்கவில்லை. மரியாதைக்குரிய விதிகள் படி, எதிர்க்கட்சி மற்றும் அரசு இடையே பேச்சுவார்த்தை நடத்துகிறேன். பிரதமரை ஆதரிப்பதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை.

“ஒதுக்கீடு வழங்கப் பட்டதை நான் மக்களுக்குத் தெரிவித்தேன். பேச்சுவார்த்தை நடைபெறும் வரை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க இயலாது,” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.

இந்தப் பிரச்சனையை நீடிக்கத் தேவையில்லை என்று கூறிய பிரதமர், இந்த விவகாரம் தொடர்பாக பக்காத்தான் ஹராப்பானுக்கும் பெரிகாத்தான் நேஷனலுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆராயுமாறு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுகள் நேரடியாக வழங்கப்படா விட்டாலும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கான வளர்ச்சி ஒதுக்கீடுகள் இன்னும் தொடர வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசை இழிவுபடுத்தும், குற்றம் சாட்டும் ஒரு தலைவருக்கு கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.


Pengarang :