NATIONAL

ஜே.பி.ஜே. சோதனை நடவடிக்கையில் 112,208 குற்ற அறிக்கைகள் வெளியீடு

சிரம்பான், டிச 1- சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) மேற்கொண்ட
“ஓப் பாத்தோ“ எனப்படும் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில்
விதிமுறைகளை மீறிய மற்றும் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச்
செலுத்த தவறிய குறிப்பாக மரண விபத்துகளுக்குக் காரணமாக இருக்கும்
வாகனமோட்டிகளுக்கு 122,208 குற்றப்பதிவுகளை வெளியிட்டது.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 29 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட
இந்த சோதனை நடவடிக்கையில் 719,766 வாகனங்கள்
சோதனையிடப்பட்டதாக ஜே.பி.ஜே. அமலாக்கப் பிரிவின் உயர் இயக்குநர்
டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

தொழில்நுட்பம் சார்ந்த அதாவது தேய்ந்து போன டயர்களைப்
பயன்படுத்தியது, மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைத்தது ஆகிய
குற்றங்களுக்கு 28,192 குற்ற அறிக்கைகள் வழங்கப்பட்ட வேளையில் சரக்கு
வாகன லைசென்ஸ் இல்லாத குற்றத்திற்கு 28,039 அறிக்கைகளும்
வானமோட்டும் லைசென்ஸ் காலாவதியான குற்றத்திற்கு 20,539
அறிக்கைகளும், இதரக் குற்றங்களுக்கு 20,537 அறிக்கைகளும்
வெளியிடப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள செனாவாங் டோல் சாவடியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட
ஓப் பாத்தோ சோதனை நடவடிக்கையைப் பார்வையிட்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த சோதனையின் போது வாகனமோட்டிகளின் நடத்தை சம்பந்தப்பட்ட
மூன்று விழுக்காட்டு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்
சொன்னார்.

பாதுகாப்பு வார்ப்பட்டை அணியாதது தொடர்பில் 1,388 குற்றப்பதிவுகளும்
சாலை சமிக்ஞை விளக்கை மீறியதற்காக 791 குற்றப்பதிவுகளும்
வெளியிடப்பட்டன என்றா அவர்.

கவசத் தொப்பி அணியாதது, வாகனமோட்டும் போது கைப்பேசியைப்
பயன்பயன்படுத்தியது மற்றும் அவசரத் தடத்தில் பயணித்தது உள்ளிட்ட
குற்றங்களுக்கு 612 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன என அவர்
தெரிவித்தார்.


Pengarang :