NATIONAL

தேசிய இலக்கவியல் அடையாளத்தைப் பெறும் முதல் மலேசியர் ஆனார் பிரதமர் அன்வார்

புத்ரா ஜெயா டிச 1- தேசிய இலக்கவியல் அடையாளம் அல்லது டிஜிட்டல்
ஐ.டி.யில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தன்னைப் பதிந்து
கொண்டார். இதன் வழி டிஜிட்டல் ஐ.டி.யில் பதிவு பெற்ற முதல்
மலேசியராக அவர் விளங்குகிறார்.

இலக்கவியல் முறையில் ஒருவரை அடையாளம் காணவும் உறுதி
செய்யவும்கூடிய ஒரு வடிவமாக இந்த டிஜிட்டல் ஐ.டி. விளங்குகிறது.
இணையம் வாயிலாகப் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது
பயனீட்டாளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதில் அரசாங்கத் மற்றும்
தனியார் துறைக்கு இது பேருதவியாக இருக்கும்.

மைகார்டை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாத இந்த டிஜிட்டல் ஐ.டி.,
பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை மிக்க ஒரு தளமாக விளங்குகிறது.
இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணபரிவர்த்தனைகளின் போது
நிகழக்கூடிய மோசடிகளைத் தடுப்பதற்கு ஏதுவாக அடையாளத்தை உறுதி
படுத்துவதற்கும் இது துணை புரிகிறது.

இந்த டிஜிட்டல் ஐ.டி.யின் அமலாக்கத்தை விரைவுபடுத்துவதற்கு மிமோஸ்
பெர்ஹாட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு
உடனடி ஒதுக்கீடாக 8 கோடி வெள்ளியை பிரதமர் அன்வார் கடந்த
நவம்பர் 21ஆம் தேதி அறிவித்தார்.

இலக்கிடப்பட்ட மானியங்களை வழங்குவதற்கான தொடக்க
நடவடிக்கையாகவும் இந்த டிஜிட்டல் ஐ.டி. விளங்குவதாக அன்வார்
கூறினார். இதன் மூலம் அரசாங்க மற்றும் தனியார் துறையினர் பல்வேறு
அனுகூலங்களைப் பெற இயலும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :