NATIONAL

கிளந்தானில் 4,530 பேர் வெள்ளத்தில் பாதிப்பு- கோலோக் ஆறு அபாயக் கட்டத்தை எட்டியது

கோத்தா பாரு, டிச 4- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கிளந்தானில்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1,462 குடும்பங்களைச் சேர்ந்த 4,530 பேர்
தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

பாசீர் மாஸ் மற்றும் தானா மேரா மாவட்டங்களில் உள்ள 12 தற்காலிக
துயர் துடைப்பு மையங்களில் அவர்கள் அனைவரும் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக மாநில சமூக நலத் துறையின் பேரிடர் தகவல்
செயலி கூறியது.

பாசீர் மாஸ் மாவட்டத்தில் 11 துயர் துடைப்பு மையங்கள்
திறக்கப்பட்டுள்ளன. இங்கு 1,454 குடும்பங்களைச் சேர்ந்த 4,411
தங்கியுள்ளனர். தானா மேராவில் உள்ள ஒரு நிவாரண மையத்தில் எட்டு
குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இதனிடையே, சுங்கை கோலோக் ஆற்றின் கோல ஜம்பு பகுதியில் நீர்
மட்டம் எச்சரிக்கை அளவை அதாவது 9.97 மீட்டரை எட்டியுள்ளதாக
வெள்ளப் பேரிடர் தகவல் செயலி தெரிவித்தது. இந்த ஆற்றின் நீர் மட்ட
எச்சரிக்கை அளவு 2.30 மீட்டராகும்.


Pengarang :