NATIONAL

விமானத்தில் பயணி திடீர் சுகவீனம்- விரைந்து முதலுதவி வழங்கினார் டாக்டர் சத்திய பிரகாஷ்

கோலாலம்பூர், டிச 4 – தமிழ் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த உலு
சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ்
நடராஜன், திடீரென உடல் நலப்பாதிப்புக்குள்ளான பயணி ஒருவருக்கு
விரைந்து சென்று முதலுதவி வழங்கினார்.

தமிழ் நாட்டில் நடைபெற்ற தேசம் அனைத்துலக ஊடகவியலாளர்
விருதளிப்பு நிகழ்வில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொள்வதற்காக
இம்மாதம் முதலாம் தேதி டாக்டர் சத்திய பிரகாஷ் சென்னை பயணம்
மேற்கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக டாக்டர் சத்திய
பிரகாஷூடன் விமானத்தில் பயணம் செய்த ஊடகவியலாளர்கள் அந்த
பயணிக்கு முதலுதவி அளிக்கும் காட்சியைப் பதிவு செய்து
ஊடகங்களில் பதிவேற்றினர்.

ரவாங்கைச் சேர்ந்த மருத்துவரான டாக்டர் பிரகாஷ் நோயாளிகள்கு
விரைந்து முதலுதவி அளிப்பதில் தனது தொழில் நெறி பிறழாது நடந்து
கொண்டது குறித்து இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்துக்
கொண்டனர்.

மருத்துவர் என்ற முறையில் தாம் ஆற்றிய இந்த பணி சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்படும் எனத் தாம் எதிர்பார்க்கவில்லை என டாக்டர் சத்திய பிரகாஷ் கூறினார்.

பயணிகளுக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும் பட்சத்தில்
அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக இரத்த அழுத்த
மற்றும் ஆக்சிஜன் அளவுக் கருவி, ஸ்தெடோஸ்கோப் உள்ளிட்ட
முதலுதவி உபகரணங்கள் ஒவ்வொரு விமானத்தில் வைக்கப்பட்டிருக்க
வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :