NATIONAL

ஒன்பது மெட்ரிக் டன் உலர் ஆமை இறைச்சி மற்றும் 5.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடல்வாழ் உயிரினங்கள் கைப்பற்றல்

கோத்தா கினபாலு, டிச 4: கடந்த புதன்கிழமை, மங்சீயில் ரீஃப், குடாட் பகுதியில் மீன் படகு ஒன்றை ஆய்வு செய்ததன் மூலம் ஒன்பது மெட்ரிக் டன் உலர் ஆமை இறைச்சி உட்பட 5.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான அழிந்து வரும் கடல் வாழ் உயிரினங்களை கடல் படையினர் (பிபிஎம்) பறிமுதல் செய்தனர்.

ரிங்கிட் 4.5 மில்லியன் மதிப்புள்ள இந்த ஆமை இறைச்சி, விலங்கு சம்பந்தப்பட்ட மிகப்பெரிய கைப்பற்றல் என்றும், இறைச்சியின் அளவைப் பெறுவதற்காக சுமார் 12,000 ஆமைகள் பலியிடப்பட்டதாக நம்பப்படுவதாகவும் சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஜௌத்தே டிகுன் தெரிவித்தார்.

ஆமை இறைச்சியைத் தவிர, இரண்டு மெட்ரிக் டன் எடையுள்ள கெராங் மற்றும் நத்தைகள், பால் மீன்கள் (90 கிலோகிராம்), கடல் குதிரைகள் (150 கிலோகிராம்), கடற்பாசி (80 கிலோகிராம்), சுறா (5 கிலோகிராம்) மற்றும் (200 கிலோகிராம்) உலர்த்தப்பட்ட கெரப்புகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காலை 11.15 மணியளவில் ஒப் தாரிங் கெலோராவில் பணியில் இருந்த குழுவினர் சந்தேகத்திற்கிடமான தோற்றத்தில் படகு இருப்பதைக் கண்டறிந்த பின்னர் அதனைச் சோதனை செய்ததாக ஜௌத்தே கூறினார்.

விசாரணையின் முடிவு, தப்பியோடிய அனைவரும் உள்ளூர் குடிமக்கள் அல்ல என்று நம்புவதாகவும், எனவே ஆமைகள் நம் நாட்டு நீர்நிலைகளில் மட்டுமல்ல, அண்டை நாடுகளிலும் பிடிக்கப்பட்டதாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.

இதைப் போன்ற படகு உள்ளூர் பிரஜை ஒருவருக்குச் சொந்தமானது மற்றும் செம்பொர்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது  விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது, ஆனால் உரிமையாளர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

– பெர்னாமா


Pengarang :