NATIONAL

திரங்கானு, கிளந்தான் மற்றும் பகாங்கில் தொடர் மழை எச்சரிக்கை

கோலாலம்பூர், டிச 4: திரங்கானு, கிளந்தான் மற்றும் பகாங்கில் உள்ள சில பகுதிகளில்
டிசம்பர் 6 முதல் 8 வரை தொடர் மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம்
(மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளந்தானில் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, பச்சோக், மச்சாங் மற்றும் பாசிர்
புத்தே ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என மெட்மலேசியா அறிக்கை ஒன்றில்
தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் பகாங்கில் குவாந்தான் மற்றும் பெக்கனில் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள்
http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது
myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும். மேலும், ஏதேனும்
கேள்விகளுக்கு 1-300-22-1638 என்ற ஹாட்லைனை அழைக்கலாம்.

– பெர்னாமா


Pengarang :