NATIONAL

சூலு வழக்கு- ஸ்பெய்ன் மத்தியஸ்தருக்கு மாட்ரிட் நீதிமன்றம் தண்டனை வழங்கும்- மலேசியா எதிர்பார்ப்பு

கோலாலம்பூர், டிச 5 – சூலு வாரிசுகள் என தங்களைச் சுயமாக
பிரகனடப்படுத்திக் கொண்ட தரப்பினருக்கு மலேசியா 1 கோடியே 49
லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலரை இழப்பீடாக வழங்க வேண்டும்
என தீர்ப்பளித்ததன் விளைவாக “தகுதியற்ற தொழில் நடைமுறை“
குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ஸ்பெய்ன் நாட்டு மத்தியஸ்தர்
கோன்ஸாலோ ஸ்டெம்பாவுக்கு மாட்ரிட் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் 11ஆம்
தேதி தண்டனை வழங்கும் என்று மலேசியா எதிர்பார்க்கிறது.

மாட்ரிட்டில் மிகவும் செல்வாக்குமிக்கவராக ஸ்டெம்பா விளங்குவதால்
இந்த விசாரணை குறித்து தாங்கள் சிறிது அச்சம் கொள்வதாக பிரதமர்
துறை ( சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ
அஸாலினா ஓத்மான் கூறினார்.

மாட்ரிட் நீதிமன்றம் சொந்தமாக விசாரணை நடத்தி ஸ்டெம்பாவுக்கு
எதிராக குற்றச்சாட்டைக் கொண்டு வந்துள்ளது. குற்றவாளி என
நிரூபிக்கப்பட்டால் அவருக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும்
விதிக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

மலேசிய அரசாங்கத்தின் இடைவிடாத மற்றும் தீவிர வலியுறுத்தல்கள்
காரணமாக இந்த வழக்கிற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டதாக அவர் மேலும்
சொன்னார்.

ஸ்டெம்பாவின் தந்தை மிகவும் செல்வாக்குமிக்க நபர். ஸ்பெய்ன் நாட்டின்
சுதந்திரப் போராட்டத்தில் அவரும் பங்கு கொண்டுள்ளார். அவரும் ஒரு
வழக்கறிஞர் என்பதால் அந்த குடும்பமே மிகவும் செல்வாக்குடன்
திகழ்கிறது என்றார் அவர்.

ஸ்டெம்பா ஸ்பெய்ன் நாட்டின் சட்டங்களை மீறியுள்ளது அப்பட்டமாக
தெரிவதால் இந்த விசாரணையில் எதிர் மறையான நெருக்குதல் எதுவும்
இருக்காது என நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் ஆஜராவதற்காகச் சட்டத்துறை தலைவரும் அனைத்துலக
நிலையிலான அதிகாரிகளும் ஸ்பெய்ன் செல்லவுள்ளன என அவர்
கூறினார்.

சூழ சுல்தானின் வாரிசுகள் எனக் கூறிக்கொள்வோருக்கு இழப்பீடு வழங்க
வேண்டும் என உத்தரவிட்ட அவரின் நடவடிக்கை இந்த வழக்கு
விசாரணை மற்றும் தண்டனையில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது
என் அவர் சொன்னார்.


Pengarang :