NATIONAL

தண்ணீர் தொட்டியில் பெண்ணின் உடல் புதைக்கப்பட்டச் சம்பவம்- சந்தேக நபருக்கு ஏழு நாள் தடுப்புக் காவல்

கிள்ளான், டிச 5 – பண்டமாரான், கம்போங் பண்டமாரில் உள்ள வாடகை
வீட்டின் குளியலறையில் பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டு
சிமெண்டினால் மூடப்பட்டச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட
அந்நிய நாட்டு பிரஜையை விசாரணைக்காக ஏழு நாட்களுக்குத் தடுத்து
வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.

ரிமாண்ட் மனு தொடர்பான காவல் துறையின் விண்ணப்பத்தை ஏற்றுக்
கொண்ட மாஜிஸ்திரேட் அமிருள் அஷ்ராப் அப்துல் ரஷிட், அவ்வாடவரை
வரும் திங்கள்கிழமை வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை
வழங்கினார்.

அந்த 53 வயது சந்தேகப் பேர்வழி இன்று காலை 9.47 மணியளவில்
போலீஸ் காவலுடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார் குற்றவியல்
சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக இந்த
தடுப்புக் காவல் அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.

தனது வாடகை வீட்டின் குளியறையில் பெண்ணின் உடல்
புதைக்கப்பட்டது தொடர்பில் வீட்டின் உரிமையாளரிடமிருந்து போலீசார்
நேற்று புகாரைப் பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அந்த தண்ணீர் தொட்டியை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு
உடைத்த தீயணைப்பு வீரர்கள் அதிலிருந்து பெண்ணின் சடலத்தை
மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ள போலீசார்
மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.


Pengarang :