SELANGOR

சிறுவன் ஜெய்ன் ரய்யான் மாட்டின் குடும்பத்திற்கு உளவியல் ஆதரவு வழங்கப்படும்

ஷா ஆலம், டிச.8: நேற்றிரவு இறந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டிஸம் குறைபாடு கொண்ட சிறுவன் ஜெய்ன் ரய்யான் மாட்டின் குடும்பத்திற்கு உளவியல் ஆதரவு வழங்கப்படும்.

காவல்துறை விசாரணை முடிந்தவுடன் இச்சம்பவம் கொலை வழக்காக வகைப்படுத்தப் பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இந்த வழக்கில் நேற்று ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அதாவது அச்சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளன.

“அக்குடும்பத்திற்கு, குறிப்பாக உளவியல் பார்வையில், மாநில அரசு வலுவான ஆதரவை வழங்கும் என்பது உறுதி” என அவர் கூறினார்.

மாநில நிர்வாகம் இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, ஏனெனில் இது ஒரு அப்பாவி குழந்தையின் உயிரை உள்ளடக்கியது மற்றும் விசாரணை நடைமுறையில் தலையிட மறுக்கிறது என அவர் கூறினார்.

கடந்த புதன்கிழமை, அச்சிறுவன் டாமன்சாரா டாமாய், அபார்ட்மென்ட் இடாமானில் உள்ள குடியிருப்பில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள ஓடையில் கண்டெடுக்கப் பட்டான்.

நேற்றிரவு, பிரேதப் பரிசோதனையில், அச்சிறுவன் கழுத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் கூறினார். மேலும், கழுத்தை நெரித்ததால் அச்சிறுவன் இறந்திருக்கலாம் என தெரிவித்தார்.

அச்சிறுவன், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இறக்கவில்லை மற்றும் சந்தேக நபர் சம்பவ இடத்தில் வசிக்கும் உள்ளூர்வாசியாக இருப்பதற்கான வாய்ப்பையும் நிராகரிக்கவில்லை என டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறினார்.


Pengarang :