SELANGOR

பெர்ணம் ஜெயாவில் 2,300 மலிவு விலை வீடுகள் கட்டப்படுவது பொருளாதாரத்தைத் தூண்டும்

ஷா ஆலம், டிச 8: கும்புலான் ஹர்தானா சிலாங்கூர் பெர்ஹாட்டின் (KHSB) கீழ் உலு சிலாங்கூரில் உள்ள பெர்ணம் ஜெயாவில் 2,300 மலிவு விலை வீடுகள் கட்டப்படுவது சம்பந்தப்பட்ட பகுதியில் பொருளாதாரத்தைத் தூண்டும் திறன் கொண்டது.

அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் 191 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு மாடி வீடு மேம்பாட்டுத் திட்டம் அதிக வணிக மற்றும் வேலை வாய்ப்புகளைத் திறக்கும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“பெர்ணம் ஜெயாவுக்கு அடுத்ததாகப் புரோட்டான் சிட்டியில் நிர்மாணிப்பது சிலாங்கூர் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று கூறினார்.

இதற்கிடையில், தனியார் டெவலப்பர்களுடன் இணைந்து பெட்டாலிங் ஜெயாவில் 2,000 யூனிட் வணிக அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்படும் என கும்புலான் ஹர்தானா சிலாங்கூர் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

2022 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட மூன்று கட்டிடங்களை உள்ளடக்கிய திட்டம் எட்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று ரஹானா அப்துல்லா எதிர்பார்க்கிறார், இதுவரை 60 சதவீத யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

“பெர்ணம் ஜெயாவில் உள்ள திட்டம் ஐந்தாண்டுகளுக்கு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒப்புதல் செயல்பாட்டில் உள்ளது (திட்டமிடும் அனுமதி). அடுத்த ஆண்டு ராயாவுக்குப் பிறகு இது தொடங்கப்படும்.

“இந்த இரண்டு திட்டங்களும் RM1.5 பில்லியன் மதிப்பை உள்ளடக்கும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :