ANTARABANGSA

நான்கு நாட்கள் இடையூறுகளுக்கு பிறகு தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன

ரமல்லா, டிச 18: நான்கு நாட்கள் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை காசா பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக அனடோலு ஏஜென்சி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜவ்வால் அறிக்கையை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் தெற்கு காசா பகுதியில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் மீட்டமைக்க பட்டுள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் காசாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொலைத்தொடர்பு சேவைகளை முழுமையாக மீட்டெடுக்க அனைத்து முற்சிகளையும் செய்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டது.

வியாழன் செயலிழப்பிற்கு பிறகு தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் தொடங்கியதைத் தொலைத்தொடர்பு நிறுவனமான “Ooredoo“  உறுதிப்படுத்தியது.

இஸ்ரேல், காசா பகுதியில் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 18,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 51,000 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

-பெர்னாமா-அனடோலு


Pengarang :