NATIONAL

தலை சிக்கி பராமரிப்பு பணியாளர் உயிரிழப்பு

ஜோர்ஜ் டவுன், டிச 27: ஜாலான் பர்மாவில் உள்ள வணிக வளாகத்தில் லிப்ட் பராமரிப்பு பணியின் போது தலை சிக்கி பராமரிப்பு பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக தினேஷ் குமார் (28), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொரு 53 வயது பராமரிப்பு பணியாளர் உயிர் பிழைத்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மாலை 4.45 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (BBP) இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தாகவும் பினாங்கு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தீயணைப்புத் துறையினர் வந்தவுடன், லிப்டில் பராமரிப்புப் பணிகளை செய்து கொண்டிருந்த இரண்டு பேர் லிப்டில் (மின் தூக்கியில்) சிக்கியிருப்பது கண்டறிந்தனர். ஆனால் அவர்களில் ஒருவரின் தலை லிப்ட் கதவில் சிக்கியிருந்தது. மற்றொரு 53 வயது நபர் பாதுகாப்பாக இருந்தார்.

தீயணைப்புத் துறையினர் பாதிக்கப்பட்டவரை அகற்றுவதற்கு முன்பு(மின் தூக்கியின் கதவைத் திறந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்,” என்று அவர் கூறினார்.

மருத்துவக் குழுவின் பரிசோதனையில் லிப்டில் தலை சிக்கி நபர் இறந்து விட்டதாகக் கண்டறிந்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :