NATIONAL

ஆறு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கோலாலம்பூர், டிச 27: இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஆறு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 28,310 பேராக அதிகரித்துள்ளது. தற்போது ஜொகூர் மற்றும் சபா மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் திரங்கானுவில் தற்காலிகத் தங்கும் மைங்களில் ( பிபிஎஸ்யில்) தஞ்சம் புகுந்துள்ளவர்களின் எண்ணிக்கை10,103 ஆகக் குறைந்துள்ளது. அதே வேளையில், பகாங்கில் 485 பேர் ஒன்பது பிபிஎஸ்யில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் கோலா லங்காட் மாவட்டத்தில் உள்ள தற்காலிகத் தங்கும் மையத்தில் நான்கு பேர் தங்கியுள்ளனர். அதே சமயம் இரண்டு மிக சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சபா மற்றும் ஜொகூரில் மூன்று பிபிஎஸ்ஸில் மொத்தம் 169 பேர் மற்றும் ஒரு பிபிஎஸ்ஸில் 83 பேரும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பகாங்கில் உள்ள ஒன்பது பிபிஎஸ்களில், நிலச்சரிவு சம்பவத்தினால் கேமரன் மலையில் திறக்கப்பட்டுள்ள ஒன்றும் அதில் அடங்கும். அதில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர் தங்கியுள்ளனர் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :