NATIONAL

ஜொகூரில் வெள்ளம்- பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,481ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர், ஜன 5 – ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி மாநிலத்தில் உள்ள 13 துயர் துடைப்பு மையங்களில் 1,481 பேர் தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,024 பேராக இருந்தது.

ஜொகூர் பாருவில் திறக்கப்பட்டுள்ள நான்கு துயர் துடைப்பு மையங்களில் 420 பேரும் கோத்தா திங்கியில் உள்ள ஆறு மையங்களில் 720 பேரும் மெர்சிங்கில் உள்ள இரு மையங்களில் 271 பேரும் குளுவாங்கிலுள்ள ஒரு மையத்தில் 70 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள மூன்று ஆறுகளில் நீர்மட்டம் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நட்மா) பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட நாடு முழுமைக்குமான பேரிடர் நிலவரம் தொடர்பான சமீபத்திய அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிங்கில் உள்ள சுங்கை தெங்லு பெசார், குளுவாங்கில் உள்ள சுங்கை எண்டாவ், பேராக் மாநிலத்தின் சுங்கை பேராக் ஆறு ஆகியவையே அந்த மூன்று ஆறுகளாகும்.

வெள்ளம், நிலச்சரிவு, பாலம் உடைந்த து அல்லது சேதமடைந்தது ஆகிய காரணங்களால் நாடு  முழுவதும் உள்ள 23 சாலைகள் போக்கு வரத்துக்கு மூடப்பட்டுள்ளன.


Pengarang :