SELANGOR

கேடி இபி கழிவு மேலாண்மையுடன் எம்பிஎஸ் மற்றும் எம்பிஏஜே குப்பை அகற்றும் சேவைக்குப் புது ஒப்பந்தம்

ஷா ஆலம், ஜன 5: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மற்றும் செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) ஆகியவை கேடிஇபி கழிவு மேலாண்மை (கேடிஇபிடபிள்யூஎம்) உடனான குப்பை அகற்றும் சேவை  ஒப்பந்தத்தை மார்ச் 1 முதல் புதுப்பிக்கும்.

ஏஜென்சியின் புதிய கார்ப்பரேட்  சின்னத்துடன்  கிட்டத்தட்ட 100 டிரக்குகள் உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ ரம்லி தாஹிர் கூறினார்.

“கேடிஇபிடபிள்யூஎம் புதிய சொத்து கொள்முதலுக்கு சுமார் RM40 மில்லியனைச் செலவிட்டது. இதில் எம்பிஎஸ் இல் கிட்டத்தட்ட 60 டிரக்குகள் உள்ளன. மீதமுள்ளவை எம்பிஏஜேயில் பயன் படுத்துவதற்காக ஆகும்.

“அதே நேரத்தில், கிள்ளான் மாநகராட்சியுடனும்  பொது துப்புரவு பணி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த செப்டம்பரில், மாநிலத்தின் கழிவு மேலாண்மை நிறுவனம் 1 அக்டோபர் 2023 முதல் எம்பிகே உடனான ஏழு ஆண்டு ஒப்பந்தத்தின் நீட்டிப்புடன் இணைந்து புதிய குப்பை லாரிகளை அறிமுகப் படுத்தியது.

மாநில கருப்பொருளான #KitaSelangor  சுலோகத்துடன்  சிவப்பு மஞ்சள் அடையாள சின்னம் பதித்த லாரிகளின் துவக்க விழாவை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநில அரசு நிர்வாக கட்டிட மைதானத்தில் தொடங்கி வைத்தார்.


Pengarang :