NATIONAL

மெனாரா மெர்டேக்கா 118  கோபுரத்தைப் பேரரசர் திறந்து வைத்தார்

கோலாலம்பூர், ஜன 11 –  மாட்சிமை தங்கிய பேரரசர்  அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அல்ஹாஜ் நேற்று மெர்டேக்கா 118 கோபுரத்தைத் திறந்து வைத்தார்.

மாமன்னரின் துணைவியார் மாட்சிமை தங்கிய  ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும்  இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மெர்டேக்கா 118  கோபுரத்திற்கு வந்த பேரரசர் தம்பதியரை துணைப் பிரதமரும்  எரிசக்தி மாற்றம் மற்றும் பொதுப் பயன்பாட்டுத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் மற்றும் பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (பி.என்.பி.) குழுமத் தலைவர் ராஜா டான் ஸ்ரீ அர்ஷத் ராஜா துன் உடா ஆகியோர் வரவேற்றனர்.

மெனாரா மெர்டேக்கா  118 கோபுரம்  பி.என்.பி.க்குச்  சொந்தமானது.  அதன் துணை நிறுவனமான  பி.என்.பி. மெர்டேக்கா  வென்சர்ஸ் சென்.பெர்ஹாட்  அதனை நிர்வகித்து வருகிறது.

118 மாடிகளுடன்  678.9 மீட்டர் உயரம் கொண்ட  அதிநவீன கோபுரமாக இது விளங்குகிறது. துபாயில் உள்ள 828 மீட்டர் உயரம் கொண்ட  புர்ஜ் கலீஃபாவிற்கு அடுத்தபடியாக  உலகின் இரண்டாவது உயரமான கோபுரமாக இது திகழ்கிறது.


Pengarang :