SELANGOR

எஸ்பிஎம் மாணவர்களுக்கு எழுதுபொருள் செட் மற்றும் கோவிட்-19 தடுப்பு கருவிகள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 17: ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த எஸ்பிஎம் மாணவர்கள் ரவாங் மாநில சட்டமன்ற சேவை மையத்திலிருந்து எழுதுபொருள் செட் மற்றும் கோவிட்-19 தடுப்பு கருவிகளை நன்கொடையாகப் பெற்றனர்.

1,600 எழுதுபொருட்கள் மற்றும் 1,700 கோவிட்-19 தடுப்பு கருவிகள் நன்கொடை,  ஜனவரி 30 ஆம் தேதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனாக இருக்கும் என சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் கூறினார்.

“இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் வசதியை உறுதி செய்வதற்காக, நான் ரவாங் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு எழுதுபொருள்கள், முகக்கவரிகள் மற்றும் கோவிட்-19 சோதனை கருவிகளை விநியோகித்து உள்ளேன்.

“அவை தாமான் டேசா 1 மற்றும் 2, துவாங்கு அப்துல் ரஹ்மான், ஸ்ரீ காரிங் மற்றும் துன் பேராக் ஆகிய ஐந்து இடைநிலைப் பள்ளிகள் ஆகும்” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

இதற்கிடையில், பண்டான் மேவா மற்றும் தாசெக் பெர்மாய் இடைநிலைப் பள்ளிகள் உட்பட தொகுதியில் உள்ள பல பள்ளிகளுக்கு முகக்கவரி பேக்குகளை தெரத்தாய் மாநில சட்டமன்ற உறுப்பினர் இயூ ஜியா ஹவுர் வழங்கினார்.

“வழங்கப்பட்ட நன்கொடை மாணவர்கள் கோவிட் -19 பரவுவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன், குறிப்பாக தேர்வுக் காலங்களில் ஆகும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :