NATIONAL

காவல்துறை அதிகாரி போல் நடித்து RM1.5 மில்லியன் மோசடி

சிரம்பான், ஜன 22: காவல்துறை அதிகாரி போல் காட்டிக் கொண்ட நபரின் மோசடி அழைப்பால் இல்லத்தரசி ஒருவர் கிட்டத்தட்ட RM1.5 மில்லியன் இழந்துள்ளார்.

வெள்ளியன்று சம்பந்தப்பட்ட மோசடி அழைப்பு குறித்து அவரது தரப்புக்கு அறிக்கை கிடைத்தது என சிரம்பான் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஹத்தா சே தின் கூறினார்.

இச்சம்பவத்தால்  RM1,491,832.82 இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“பாதிக்கப்பட்ட நபருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது ,” என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பின்னர், அறிமுகம் இல்லாத பல நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் செலுத்துமாறு பாதிக்கப்பட்டவரிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இது போன்ற சம்பவம் நடந்தால் மோசடிக்கு ஆளாகாமல் இருக்க உடனடியாகக் காவல் துறையுடன் தொடர்பு கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டதாக முகமட் ஹத்தா கூறினார்.

– பெர்னாமா


Pengarang :