SELANGOR

நீர்க் கட்டண உயர்வினால் பொருள் விலையேற்றம் இருக்காது- பயனீட்டாளர் விவகார அமைச்சு நம்பிக்கை

அலோர் காஜா, ஜன 23 – எதிர்வரும் பிப்ரவரி தேதி தொடங்கி புதிய குடிநீர்க் கட்டணம் அமலுக்கு வந்தவுடன் வணிகர்கள் குறிப்பாக உணவு விற்பனை செய்வோர் தங்களின் விற்பனைப் பொருள்களின் விலையை உயர்த்த மாட்டார்கள் என உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த உயர்வு குடிநீரை மட்டுமே உள்ளக்கிடக்கியுள்ளதோடு வர்த்தகர்களின் விற்பனைப் பொருள்களில் எந்த நேரடி தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அதன் அமைச்சர் டத்தோ அர்மிஸாம் முகமது அலி கூறினார்.

இந்த நீர்க்கட்டண உயர்வு அமைச்சரவை, மாநில அரசு மற்றும் தேசிய நீர் மன்றம் ஆகியத் தரப்பினரை உள்ளடக்கியுள்ளதால் அரசாங்கம் இந்த கட்டண உயர்வை தொடர்ந்து கண்காணித்து வரும் என்று அவர் சொன்னார்.

பொருள் விலையேற்றம் தொடர்பில் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம். இந்த கட்டண உயர்வு இதரப் பொருள்களுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் விலையேற்றம் இருக்காது என நம்புகிறோம் என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற ஏஹ்சான் ரஹ்மா விற்பனை மற்றும் 2024 மலாக்காவுக்கு வருகை தாருங்கள் ஆண்டு நிகழ்வைத் தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெக்கான் மஸ்ஜிட் தானாவில் உள்ள பேரங்காடி ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ராவுப் யூசோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

எதிர்வரும் பிப்ரவரி முதல் தேதி தொடங்கி தீபகற்ப மலேசியா மற்றும் லபுவானில் நீர்க் கட்டணம் உயர்வு காணும் என்று தேசிய நீர் சேவை ஆணையம் இம்மாதம் 17ஆம் தேதி கூறியிருந்தது. இந்த புதிய கட்டண சீரமைப்பின் வழி ஒரு கனமீட்டர் நீருக்கு 22 காசு விலையேற்றம் காணும்.


Pengarang :