NATIONAL

ஊழல் வழக்கு விசாரணைகளில் நான் தலையிட்டதில்லை- அன்வார் வலியுறுத்து

ஈப்போ, ஜன 29 : ஊழல் வழக்குகள் தொடர்பில் அமலாக்க நிறுவனங்கள்
மேற்கொள்ளும் விசாரணைகளில் அல்லது சம்பந்தப்பட்டவர்களின்
சொத்துகளைப் பறிமுதல் செய்வதில் நான் ஒருபோதும்
தலையிட்டதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
வலியுறுத்திக் கூறினார்.

அரசாங்கத்தின் வழிகாட்டி விரிவானது என்பதோடு சட்டவிரோதமான
முறையில் சொத்து சேர்த்தவர்கள் மீது விசாரணை நடத்த அது
வலியுறுத்துகிறது என்று அவர் சொன்னார்.

நான் அத்தகைய விஷயங்களில் தலையிட மாட்டேன். ‘ஏ‘ நபர் அல்லது
‘பி‘ நபர் மீது விசாரணை மேற்கொள்வதிலும் ‘ஏ‘ நபர் அல்லது ‘பி‘ நபரின்
சொத்துகளைப் பறிமுதல் செய்வதிலும் நான் தலையிடவில்லை என்பது
துணைப் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்களுக்குத் தெரியும்.

நமது வழிகாட்டி விரிவானது. முன்போ, இப்போதோ யாராவது
சொத்துகளைச் சட்டவிரோதமான முறையில் சேர்த்திருந்தால் அவர்கள் மீது
துணிவுடன் நடவடிக்கை எடுப்பது அமலாக்கத் தரப்பினரின் கடமையாகும்.
அவர்களை காப்பது எங்கள் கடையாகும் என்றார் அவர்.

நேற்று இங்கு பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாட்டை
முடித்து வைத்து உரையாற்றுகையில் பக்கத்தான் ஹராப்பான்
தலைவருமான அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் இன்றைய பொருளாதார சிக்கல்களுக்கு காரணமாக இருக்கும்
ஊழல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தனதுக்குள்ள சக்தி
மற்றும் ஆதரவை ஒற்றுமை அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்த
வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

தற்போது 1.1 டிரிலியன் வெள்ளியாக உள்ள கடனுடன் நிகழ்வுசார்
கடப்பாட்டையும் சேர்த்தால் மெத்த கடன் தொகை 1.5 டிரிலியன் வெள்ளியை எட்டுகிறது. பழைய கதையை ஏன் பேசுகிறீர்கள் என்று மக்கள் கேட்கலாம். ஆம், இது பழைய கதைதான். ஆனால் இப்போது அந்த கடனைச் செலுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்றார் அவர்.

பொருளாதார பொறுப்பு மேலாண்மை, பொறுப்புமிக்க பொருளாதார
கொள்கைகள் மற்றும் மேலாண்மை ஆகியவை ஜனரஞ்சமாக இருக்க
வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருந்த போதிலும் நாம் நடவடிக்கை
எடுத்தாக வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :