NATIONAL

ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது

கோலாலம்பூர், ஜன. 29: செவ்வாய்கிழமையன்று அம்பாங்கில் உள்ள லோரோங் ஈக்கான் எமாஸ் 6 இல் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று, அம்பாங் மற்றும் ஜோகூர் பாருவில் உள்ள தாமான் புத்ரி வாங்சாவில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் கைது செய்யப் பட்டனர் என அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

செவ்வாயன்று பாதிக்கப்பட்ட வரும் அவரது நண்பரும் அம்பாங்கிற்குச் சந்தேக நபர்களில் ஒருவருடன் கருத்து வேறுபாடு பற்றி விவாதிக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக என்று அவர் கூறினார்.

“காலை 10.15 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சந்தேக நபர்கள் பாதிக்கப் பட்டவரை சுயநினைவு இழக்கும் வரை அடித்தனர். பிறகு, பாதிக்கப் பட்டவர் நண்பரால் செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளார்,” என்று முகமட் அசாம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சந்தேக நபர்களின் சிறுநீர் பரிசோதனையின் முடிவு போதைப்பொருளுக்கு எதிர்மறையாக உள்ளது என்று அவர் கூறினார். ஆனால் அவர்களில் ஒருவருக்கு ஒன்பது முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் மற்றவர்களுக்கு ஏதும் இல்லை என்றும் சோதனையில் கண்டறியப்பட்டது.

“பாதிக்கப்பட்டவரை மூன்றுக்கும் மேற்பட்டோர் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. இன்னும் இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சந்தேக நபர்கள் அனைவரும் அடுத்த பிப்ரவரி 2 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளனர்,” என அவன் சொன்னார்.

– பெர்னாமா


Pengarang :