NATIONAL

திரங்கானுவிலுள்ள இரு வெள்ள நிவாரண மையங்களில் 473 பேர் அடைக்கலம்

கோலாலம்பூர், ஜன 31- திரங்கானு மாநிலத்தில் வெள்ளம் காரணமாக 157
குடும்பங்களைச் சேர்ந்த 473 பேர் இன்னும் தற்காலிக நிவாரண
மையங்களில் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் டுங்குனில் உள்ள
இரு நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளதாக நட்மா
எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பேரிடர்
கட்டுப்பாட்டு மையம் கூறியது.

வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் டெலிமெட்ரி நிலையத்தின்
அதிகாலை 6.00 மணி நிரவரப்படி ஜோகூர், கெடா, பகாங், பெர்லிஸ், சபா
மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில் உள்ள சில ஆறுகளில் நீர் மட்டம்
அபாயக் கட்டத்தில் உள்ளது.

ஜோகூர் மாநிலத்தின் கோத்தா திங்கியில் உள்ள சுங்கை ஜோகூர், கெடா
மாநிலத்தின் கோத்தா ஸ்டாரில் உள்ள சுங்கை கெடா, சுங்கை பகாங்,
சுங்கை ரொம்பின், (பகாங்) சுங்கை ஆராவ் (பெர்லிஸ்), சுங்கை
கினபாத்தாங்கான் (சபா), சுங்கை திரங்கானு (திரங்கானு) ஆகியவையே
அபாயக்கட்டத்தில் உள்ள ஆறுகளாகும்.

வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பாலம் உடைந்தது ஆகிய காரணங்களால்
நாடு முழுவதும் உள்ள 18 சாலைகள் போக்குவரத்துக்கு
மூடப்பட்டுள்ளதாக நட்மா கூறியது.


Pengarang :