NATIONAL

14 புதிய சந்தையைத் திறக்கவும் 40 விவசாய சந்தைகளை மேம்படுத்தவும் (ஃபமா) இலக்கு 

கோலாலம்பூர், ஜன 31: இந்த ஆண்டு RM200 மில்லியன் செலவில் ஏற்கனவே உள்ள 40 விவசாய சந்தைகளை மேம்படுத்துவதுடன் கூடுதலாக 14 புதிய விவசாய சந்தைகளை திறக்க மலேசிய விவசாய சந்தைப்படுத்தல் வாரியம் (ஃபமா) இலக்கு கொண்டுள்ளது.

விவசாய சந்தை நிறுவப்பட்ட 39 ஆண்டுகளில், அறிமுகக் கட்டம் (1985-1994), வலுப்படுத்தும் கட்டம் (1995-2003), நவீனமயமாக்கல் கட்டம் (2004-2010), உருமாற்றம் கட்டம் (2011-2020 ) மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் கட்டம் (2021-தற்போது வரை) என பல கட்டங்களைக் கடந்துள்ளது என ஃபமா டைரக்டர் ஜெனரல் அப்துல் ரஷீத் பஹ்ரி கூறினார்.

“1985 ஆம் ஆண்டில், 317 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 12 விவசாய சந்தைகள் ஆண்டுக்கு RM1.4 மில்லியன் விற்பனை மதிப்பைப் பதிவு செய்தன.

“இதுவரை, நாடு முழுவதும் 223 உழவர் சந்தைகள் உள்ளன. இதில் 8,542 தொழில் முனைவோர் பங்கேற்றுள்ளனர் மற்றும் RM244.6 மில்லியன் விற்பனை மதிப்பை பதிவு செய்ய முடிந்தது,” என்று அவர் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

முதல் விவசாய சந்தை ஜோகூர் பாருவில் உள்ள ஃபாமா தம்போய் குளிர்பதன கிடங்கு வளாகம் ஆகும். அவ்விடம் அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் ஜனவரி 31 1985 அன்று திறக்கப்பட்டது.

சந்தைப்படுத்தல் வழிகளை உருவாக்குதல் மற்றும் விவசாய தொழில் முனைவோர் தங்கள் சொந்த விவசாய பொருட்களை நுகர்வோருக்கு சந்தைப்படுத்துவதில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக ஒரு சந்தைப்படுத்தல் நிறுவனமாக விவசாய சந்தை அறிமுகப் படுத்தப்பட்டது.

“தற்போது, விவசாய சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் இது நுகர்வோரின் விருப்பச் சந்தையாகவும், வெற்றிகரமான சந்தைப்படுத்தல் தளமாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கிறது.

“தேசிய வேளாண் உணவுக் கொள்கையின்படி விவசாய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டு செயல் முறையை விரைவு படுத்துதல் மற்றும் பல விவசாயிகளையும் விவசாய சந்தை உருவாக்கியுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 21 வரை அக்ரோ மடாணி விற்பனையை செயல் படுத்தியதன் சாதனையை ஃபமா அறிவித்தது. அதாவது 4,120 தொழில்முனைவோரின் ஈடுபாட்டுடன் RM4.4 மில்லியன் விற்பனை மதிப்பைப் பதிவுசெய்து 324,000 குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

தேசிய விவசாய சந்தை நிறுவப்பட்டதன் 39வது ஆண்டின் தொடக்க விழா இன்று புத்ராஜெயா விவசாய சந்தையில் நடைபெறும். அதனை அப்துல் ரஷீட் அவர்களால் நடத்தப்படும்.

– பெர்னாமா


Pengarang :