NATIONAL

கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு 11 நிகழ்ச்சிகள் ஏற்பாடு – டிபிகேஎல்

கோலாலம்பூர், ஜன 31 – கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஜூலை 14 வரை 11 நிகழ்ச்சிகள் கோலாலம்பூர் நகர மன்றம் (டிபிகேஎல்) ஏற்பாடு செய்துள்ளது.

இதில் அக்டோபர் முதல் பிப்ரவரி இறுதி வரை 1 Suara @ 50 WP திட்டங்களும் அடங்கும் என்று டிபிகேஎல் தெரிவித்தது. அதனை தொடர்ந்து, “திரைப்பட கொண்டாட்டம்“ (பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 25 வரை); வளமான நடை மற்றும் சீன புத்தாண்டு கொண்டாட்டம் (பிப்ரவரி 24); நொடுந்தூர சைக்கிள் ஓட்டுதல் மராத்தோன் @GFNY கோலாலம்பூர் (பிப்ரவரி 25) மற்றும் கார்னிவல் 50WP 2024 (ஜூலை 13 முதல் ஜூலை 14 வரை) ஆகிய நடவடிக்கைகள் நடைபெறும்.

ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் ராஜா, ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் 3,000 கூட்டரசு பிரதேச கொடிகளால் டிபிகேஎல் அலங்கரித்துள்ளது.

நகரைச் சுற்றியுள்ள தெரு விளக்குகளில் 1,550 கூட்டரசு பிரதேச கொடிகள் தொங்க விடப்பட்டுள்ளது. மேலும் கூட்டரசு பிரதேசம் மற்றும் கோலாலம்பூர் கொடிகளைத் தங்கள் கட்டிடங்களில் பறக்க விடுவதன் மூலம் ஒன்றாக விழாவைக் கொண்டாட வளாக உரிமையாளர்களுக்கு கடிதம் வழங்கப் பட்டுள்ளது.

“2024 கூட்டரசு பிரதேச தினத்தை அனைத்து நகரவாசிகளும் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்” என்று இன்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

“உங்கள் வளாகத்தில் கூட்டரசு பிரதேச கொடிகளைப் பறக்க விடுவதன் மூலம் இந்த அர்த்தமுள்ள நாளை சிறப்பிக்கவும்” என்று டிபிகேஎல் தெரிவித்தது.

– பெர்னாமா


Pengarang :