SELANGOR

592 எஸ்பிஎம் மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் மற்றும் பாக்கெட் தண்ணீர் வழங்கப்பட்டது

ஷா ஆலம், ஜன 31: ஶ்ரீ செத்தியா தொகுதியில் உள்ள மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 592 எஸ்பிஎம் மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் மற்றும் பாக்கெட் தண்ணீர் வழங்கப்பட்டது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த (B40) மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான போதுமான உபகரணங்களைக் கொண்டு இருப்பதை உறுதி செய்வதற்காக RM5,850 மதிப்புமிக்க நன்கொடை வழங்கப்பட்டது என சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

“TTDI ஜெயா (322), பண்டார் சன்வே (141) மற்றும் லெம்பா சுபாங் (129) ஆகிய இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது.

“ஒவ்வொரு மாணவருக்கும் 2B பென்சில், மூன்று பேனா, ஒரு பென்சில் சார்ப்னர், ஓர் அழிப்பான், ஓர் அடிக்கோல் மற்றும் ஆறு பாக்கெட் தண்ணீர் வழங்கப்பட்டன,” என்று டாக்டர் ஃபஹ்மி கூறினார்.

முன்னதாக, நாடு முழுவதும் 3,340 தேர்வு மையங்களில் மொத்தம் 395,870 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வு எழுத உள்ளதாக மலேசிய கல்வி அமைச்சகம் அறிவித்தது.


Pengarang :