ஷா ஆலம், பிப் 2: குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிகரிக்க “பாதுகாப்பான குடும்பம்“ எனும் பிரச்சாரத்தை சிலாங்கூரில் விரைவில் செயல்படுத்தப்படும்.

பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்வதில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு வரவேற்கப்படுகிறது. குறிப்பாக அரசு சாரா நிறுவனங்கள் (NGO) மற்றும் தொழில்துறையினர் என சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“தற்போதையே சூழ்நிலையில், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மூலம் ஒரு ஸ்மார்ட் பயன்பாடு இருந்தால் மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன். ஆப்ஸ் மற்றும் சாதனங்களை உருவாக்கக்கூடிய ஸ்டார்ட்அப்கள் எங்களுக்குத் தேவை.

இணையம் மற்றும் பாலியல் சீர்கேடு போன்ற சமூக ஊடகங்களின் ஆபத்துக்களுக்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்த சிலாங்கூர் தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

நேற்று இங்குள்ள மருத்துவமனை ஒன்றின் பார்க்கிங் பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் காரில் விடப்பட்ட ஐந்து வயது சிறுமி இறந்த சம்பவம் குறித்து அன்பால் கருத்து தெரிவித்தார்.

“இந்த வழக்கு எங்களுக்கு ஒரு எச்சரிக்கையை அளிக்கிறது.

“குழந்தையின் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தாயாக இந்த செய்தியை படித்து மிகவும் வருத்தமாக உள்ளேன்,” என்றார்.