NATIONAL

RM127 மில்லியனுக்கும் அதிகமான பள்ளி உதவித்தொகையை சிலாங்கூர் பெற்றது

காஜாங், பிப் 2: சிலாங்கூர் மாநில கல்வித்துறை (ஜேபிஎன்) மாநிலத்தில் உள்ள 848,744 மாணவர்களுக்கு வழங்குவதற்காக RM127 மில்லியனுக்கும் அதிகமாகப் பள்ளி உதவித்தொகையைப் பெற்றது.

சிலாங்கூரில் 933 பள்ளிகள் உள்ளன மற்றும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு அதிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

“இந்த உதவியின் மூலம், பெற்றோரின் சுமையைக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு மாணவர்களுக்கு RM150 தொகை முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

“புகார் ஏதும் இருந்தால் நாங்கள் விசாரிப்போம். கொடுக்கப்பட்ட தொகை முழுமையாக வழங்கப்பட இருக்க வேண்டும்,” என்றார்.

இன்று யூ ஹுவா இடைநிலைப் பள்ளியில் சிலாங்கூர் ஜேபிஎன் இயக்குநர் டாக்டர் ஜாஃப்ரியிடம் பள்ளி உதவி தொகைக்கான காசோலையை ஒப்படைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செலவான RM450 மில்லியனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பள்ளி உதவித்தொகைக்கு RM788 மில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி துறையை ஒரு முக்கிய அங்கமாக பராமரிக்க RM58.7 பில்லியனுக்கும் அதிகமான ஒதுக்கீட்டைப் கல்வி அமைச்சகம் பெற்றது.


Pengarang :