NATIONAL

காணாமல் போனதாகக் கூறப்பட்ட சமூக வலைத்தள வாசி பாதுகாப்பாக உள்ளார்

மலாக்கா, பிப் 5 – வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட போஸ் மரியோ என்று அழைக்கப்படும் சமூக வலைத்தள வாசி பாதுகாப்பாக உள்ளார்.

அந்நபர் தற்போது ஜாலான் சையத் அப்துல் அஜீஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மோஸ் மரியோ என்கிற யூ பூன் சியாங் (30) உண்மையில் காணாமல் போகவில்லை மாறாக அவரது கைப்பேசி கடை வியாபாரம் தொடர்பான மன அழுத்தம் காரணமாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் என மலாக்கா தெங்கா மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாதித் கூறினார்.

“மருத்துவமனையில் போஸ் மரியோ இருப்பதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.

“மரியோ தனது இரண்டு கைப்பேசி கடைகளை நிர்வகிப்பது மற்றும் அவரது 22 ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் அவர் க்ளெ பாங்கில் உள்ள ஆளில்லாத வீட்டில் தங்கி இருந்ததாக ,” என்று கிறிஸ்டோபர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்நபர் வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகாலை 3 மணியளவில் அவர் பந்தாய் க்ளெபாங்கிற்குத் தனியாகச் சென்றதாகவும், அவரது கார் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :