NATIONAL

அதிக எண்ணிக்கையில் அந்நிய நாட்டினர்- மக்கள் மத்தியில் சஞ்சலம்

கோலாலம்பூர், பிப் 13 – இந்நாட்டில் அதிகரித்து வரும் அந்நிய நாட்டினரின்
ஆதிக்கம் உள்ளுர் மக்களிடையே பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ள
நிலையில் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அமலாக்கத்
தரப்பினர் அண்மைய காலமாக அந்நியர்களின் ஆதிக்கம் நிறைந்தப்
பகுதிகளில் தொடர்ச்சியாக அமலாக்கச் சோதனைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

இச்சோதனைகளின் போது உரிய ஆவணங்களைப் கொண்டிராதவர்கள்
கைது செய்யப்பட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காகத் தடுப்புக் காவல்
முகாமிற்குக் கொண்டுச் செல்லப்படுகின்றனர்.

எனினும், அமலாக்கத் தரப்பினரின் இந்த ஆக்ககரமான
நடவடிக்கைகளுக்குப் பின்னரும் அந்நிய நாட்டினரின் எண்ணிக்கை
குறையவில்லை என்பது சமூகத்தின் பார்வையில் பட்டவர்த்தனமாகத்
தெரிகிறது.

மாறாக, அந்நிய நாட்டினர் புரியும் சில செயல்கள் நாட்டின் சட்ட
திட்டங்களுக்கு வேண்டுமென்றே சவால் விடும் வகையிலும் உள்ளது.
இத்தகையச் செயல்களை வலைத்தளவாசிகளும் சமூக இயக்கவாதிகளும்
பகிர்ந்து வருகின்றனர். அந்நிய பிரஜைகளுக்கு எதிரான அமலாக்கத்
தரப்பினரின் நடவடிக்கைகள் முழுமை பெறவில்லை என்றத் தோற்றத்தை
இது ஏற்படுத்துகிறது.

நாட்டிலுள்ள அமலாக்கத் தரப்பினர் தனித்தனியாகச் சோதனைகளை
மேற்கொள்வது அந்நிய நாட்டினருக்கு எதிரான அமலாக்க நடவடிக்கையில்
காணப்படும் பலவீனமாகக் காணப்படுவதாக க் கூறுகிறார். மலாயா
பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆய்வு
மையத்தின் துணைத் தலைவர் இணைப் பேராசிரியர் டாக்டர் மஷித்தா
ஹமிடி கூறுகிறார்.

இதனால்தான் இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் உரிய பலனைத்
தரவில்லை என்று பொது மக்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு அமலாக்க
நிறுவனமும் தனித்தனி பணி இலக்குகளைக் கொண்டுள்ளன. அவர்கள்
தங்களின் இலக்குகளை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அத்தகைய
சோதனைகளை மேற்கொள்கின்றனர் என்றார் அவர்.

அமலாக்க நடவடிக்கைகளை மேலும் ஆக்ககரமான முறையில்
மேற்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து அமலாக்கப் பிரிவுகளையும் ஒரே
குடையின் கீழ் வைக்கக்கூடிய ஓரிட அமலாக்க மையத்தை அரசாங்கம்
உருவாக்க வேண்டும் என மாஷித்தா பரிந்துரைத்தார்.


Pengarang :