NATIONAL

உரிமங்களின் நிபந்தனைகளை மீறிய மூன்று பயணிகள் படகுகள் தடுத்து வைப்பு

சிரம்பான், பிப் 13: நேற்று பிற்பகல் போர்ட் டிக்சனில் மாநிலக் கடல் உரிமங்களின்
நிபந்தனைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட மூன்று பயணிகள் படகுகளை மலாக்கா
மற்றும் நெகிரி செம்பிலானின் மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (APMM) தடுத்து
வைத்தது.அமலாக்க அதிகாரிகள் ரிசார்ட் பகுதியில் வழக்கமான சோதனையை
மேற்கொண்டபோது, அப்படகுகள் உரிமத்தின் செல்லுபடியாகும் நிபந்தனைகளை
மீறியதைக் கண்டறிந்தனர் என மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் கேப்டன்
முகமட் கைரி அப்துல் அஜீஸ் கூறினார்.

கைது செய்யப்பட்ட போது, படகு ஓட்டுநர் விடுமுறையைக் கழிக்க வந்த பயணிகளை
ஏற்றிச் சென்று கொண்டிந்தார் என தெரிவிக்கப்பட்டது.

படகின் ஓட்டுநர் உள்ளூர் குடிமகன் ஆவார். அவர் பெயர் உரிமத்தில் இல்லை, அனுமதி
காலாவதியானது மற்றும் பிற குற்றங்கள் அடங்கும்" என்று அவர் பெர்னாமாவிடம்
கூறினார்.

பயணிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில்,
படகுகளை இயக்குபவர்கள் செல்லுபடியாகும் உரிம நிபந்தனைகளுக்கு இணங்க
வேண்டும் என்றார்.

தடுத்து வைக்கப்பட்டப் படகுகளைக் கட்டளைச் சட்டம் (எம்எஸ்ஓ) 1952 இன் கீழ்
விசாரிப்பதற்காக மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் ஜெட்டிகளுக்குக்
கொண்டு செல்லப்பட்டது என்று முகமட் கைரி கூறினார்.

கடலில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் அவசரநிலைகள் குறித்த எந்த தகவலும்
உடனடியாக மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் கடல்சார் செயல்பாட்டு மையத்திற்கு
06-3876730 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும் என்றும் MERS 999 24 மணி நேரமும்
செயல்படும் என்றும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :