SELANGOR

 ஷா ஆலம் தேசிய தாவரவியல் பூங்காவில் இலவசமாகப் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு

ஷா ஆலம், பிப் 13: பள்ளி விடுமுறை காலம் முழுவதும் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகளை ஷா ஆலம் தேசிய தாவரவியல் பூங்கா இலவசமாக வழங்குகிறது.

அதில் களிமண்ணைக் கொண்டு அலங்கரித்தல், ராட்சத நுரை பலூன்கள் ஊதுதல் மற்றும் முக ஓவியம் ஆகியவை அடங்கும் என்று ஷா ஆலம் தேசிய தாவரவியல் பூங்கா தெரிவித்துள்ளது.

“விலங்கு பண்ணையில் தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்குகளுடன் நெருக்கமாகப் பழகுவதற்கு கூடுதலாக, மரம் நடும் வகுப்புகள் மற்றும் மூலிகை செடிகள், கலை மற்றும் கைவினை நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ளுதல் ஆகியவை இருக்கும் என ஹுசின் ஃபௌசி தெரிவித்தார்.

“இந்நடவடிக்கைகள் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். நடவடிக்கைகளின் அட்டவணையை தேசிய தாவரவியல் பூங்காவின் அதிகாரப்பூர்வச் சமூக ஊடகம் அல்லது http://www.tbnsa.gov.my என்ற இணைப்பில் சரிபார்க்கலாம்” என்று ஷா ஆலம் தேசிய தாவரவியல் பூங்கா தெரிவித்துள்ளது.

நுழைவுச் சீட்டுகள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்களுக்கு RM1 மற்றும் பெரியவர்களுக்கு RM3 ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு இலவசம்.


Pengarang :