ஷா ஆலம், பிப் 15: நேற்று முதல் பிப்ரவரி 20 வரை மீதமுள்ள ரம்ஜான் மற்றும் ஐடில்பித்ரி பஜார் இடங்களுக்கான அனுமதி விண்ணப்பங்களை கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிகேஎஸ்) திறந்துள்ளது.

மீதமுள்ள 206 ரம்ஜான் மற்றும் 124 ஐடில்பித்ரி பஜார் இடங்களுக்காக https://ip3ks.mpks.gov.my என்ற இணைப்பின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என முகநூல் வழியாக எம்பிகேஎஸ் தெரிவித்துள்ளது.

ஏழு இடங்களில் மீதமுள்ள ரம்ஜான் பஜாருக்கான வணிக தளங்கள் RM300 விலையில் வழங்கப்படுகின்றன. அதே சமயம் சுங்கை பூலோ பொதுச் சந்தைக்கு முன்னால் உள்ள ஐடில்பித்ரி பஜார் (ஏப்ரல் 7 – ஏப்ரல் 9) RM150 மற்றும் ஜாலான் KP/1, தஞ்சோங் காராக்கில் RM400 ஆகும்.

“விண்ணப்பதாரர்கள் எந்த எம்பிகேஎஸ் அபராதமும் இல்லாமல் இருக்க வேண்டும், தேவையான துணை ஆவணங்களை இணைக்க வேண்டும் மற்றும் சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் இணைய வணிக விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி கரும்பு, இளநீர் கடைகளுக்கு 60 ரிங்கிட் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்,”.

மேலும் தகவலுக்கு, எம்பிகேஎஸ் உரிமத் துறையை 0332891439 அல்லது 1549/2423/4328 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.