SELANGOR

குழந்தை பராமரிப்பு மையத்தின் RM100 கட்டண உதவிக்கு விண்ணப்பிக்குமாறு பெற்றோர்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், பிப் 21: தகுதியுள்ள பெற்றோர்கள் நர்சரி அல்லது குழந்தை பராமரிப்பு
மையத்தின் மாதத்திற்கு RM100 கட்டண உதவிக்கு விண்ணப்பிக்குமாறு டத்தோ மந்திரி
புசார் அழைப்பு விடுத்துள்ளார்.

https://asuhpintar.yawas.com.my/ என்ற இணைப்பின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அனாக்கு அசோஹான் பிந்தார் திட்டத்தின் (அசோ பிந்தார்) மூலம் குழந்தைகளுக்கு நல்ல குழந்தை பராமரிப்பை வழங்குவதில் பெற்றோரின் சுமையைக் குறைக்கும் முயற்சியை அவர் விளக்கினார்.

“சிலாங்கூரில் உள்ள குழந்தைகளின் நலனைப் பாதுகாப்பதில் தரமான மற்றும் பயனுள்ள குழந்தை பராமரிப்பை வழங்குவதும் அடங்கும் என்றார்.

“இத்திட்டத்தின் மூலம், தகுதியுடைய பெற்றோர்கள் நான்கு வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளுக்கான நர்சரி அல்லது குழந்தை பராமரிப்பு மையக் கட்டணத்திற்காக மாதத்திற்கு RM100 உதவியைப் பெறுவார்கள். இந்த உதவி தின பராமரிப்பு அல்லது நர்சரிக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது,” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2024 ஐ முன்வைக்கும்போது, பொது நர்சரிகள் அல்லது குழந்தைப் பராமரிப்பு மையங்களுக்கு நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெற்றோருக்கு மாதத்திற்கு RM100 உதவியாக மந்திரி புசார் அறிவித்தார்.

குறைந்த வருமானம் கொண்ட குழுவிற்கு (B40) உதவ இந்த திட்டத்திற்காக RM600,000 வழங்கப்பட்டது என்று அவர் விளக்கினார்.


Pengarang :