NATIONAL

லஞ்சமாகத் தாய்லாந்துக்குச் சுற்றுலா- நிறுவன நிர்வாகிகள் இருவர் எம்.ஏ.சி.சி.யிடம் சிக்கினர்

கோலாலம்பூர், பிப் 21- சுமார் 3,000 வெள்ளி மதிப்பிலான தாய்லாந்து
நாட்டிற்கான விமான டிக்கெட் மற்றும் தங்குமிட வசதியைப் கையூட்டாகப்
பெற்ற சந்தேகத்தின் பேரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இரு
நிர்வாகிகளை ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.

கோலாலம்பூர் வட்டாரத்தில் நேற்றிரவு 10.00 முதல் 11.00 மணி வரை
மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் உள்நாட்டினரான
அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக எம்.ஏ.சி.சி. வட்டாரம் கூறியது.

அவ்விரு சந்தேகப்பேர்வழிகளும் கடந்த 2023ஆம் ஆண்டு இந்த
குற்றத்தைப் புரிந்ததாக அந்த வட்டாரம் தெரிவித்தது. வங்கி ஒன்றுடனான
அந்த நிறுவனத்தின் குத்தகைய எந்த இடையூறுமின்றி
மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த பயணச் சலுகை
லஞ்சமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கூட்டரசு பிரதேச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர்
ட்த்தோ முகமது பவுஸி ஹூசேன் சே மாமாட்டை பெர்னாமா தொடர்பு
கொண்ட போது இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

இந்த புகார் தொடர்பில் 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16(ஏ)
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் கைதான
இருவரும் எம்.ஏ.சி.சி. ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


Pengarang :