NATIONAL

265வது ஆட்சியாளர் மாநாட்டிற்குச் சிலாங்கூர் சுல்தான் தலைமை தாங்கினார்

கோலாலம்பூர், பிப் 21-  இன்று இஸ்தானா நெகாராவில் இங்குள்ள  நடைபெற்ற  265வது ஆட்சியாளர் மாநாட்டிற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் தலைமை தாங்கினார்.

ஆட்சியாளர்களின் 264வது (சிறப்பு) மாநாடு  கடந்த ஜனவரி 31ஆம் தேதி மலேசியாவின் 17வது மாமன்னரின் பதவியேற்பு விழாவுடன் இணைந்து நடைபெற்றது.

இந்த இரண்டு நாள் மாநாட்டில்  திரெங்கானு சுல்தான் மிஸான் ஜைனால் அபிடீன், கெடா சுல்தான் சுல்தான் சலேஹுடின் சுல்தான் பட்லிஷா, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா மற்றும் நெகிரி செம்பிலான் யாங் டிபெர்த்துவான் புசார் துவாங்கு முக்ரிஸ் துவாங்கு முனாவிர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜொகூர்  ரீஜண்ட் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், பகாங் தெங்கு ஹஸனல் இப்ராஹிம் ஆலம் ஷா அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா, பெர்லிஸ் துவாங்கு சைட் ஃபைசுடின் புத்ரா ஜமாலுல்லைல்  மற்றும் கிளந்தான் துங்கு  மக்கோத்தா முகமது ஃபாக்ரி ஆகியோரும்  கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், பினாங்கு  ஆளுநர் துன் அகமது புஸி அப்துல் ரசாக், மலாக்கா ஆளுநர் துன் முகமது அலி ருஸ்தாம், சபா ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் மற்றும் சரவாக்  ஆளுநர் துன் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர்  ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மலாய் ஆட்சியாளர்களுடன் அந்தந்த மாநில மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்களும்  பங்கேற்றனர்.


Pengarang :