SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதியில் எம்பிஐயின் பள்ளிக்குத் திரும்பும் உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் 

ஷா ஆலம், பிப் 21: எம்பிஐயின் பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தைக் கோத்த கெமுனிங் தொகுதியின் ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது, கோத்த கெமுனிங் தொகுதி வாக்காளர்களுக்கு விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ளது.குடியிருப்பாளர்கள் பிப்ரவரி 19, 2024 முதல் மார்ச் 13, 2024 வரை இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் பங்கு பெற தேவைப்படும் தகுதிகள் விண்ணப்பதாரரின் தாய் அல்லது தந்தை கோத்தா கெமுனிங் தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். மேலும், குழந்தைகள் தேசியப் பள்ளி, தேசிய வகை பள்ளி, தேசிய இடைநிலைப்பள்ளி, தேசிய ஆரம்பப்பள்ளி, தேசிய சமயப் பள்ளி மற்றும் தேசிய சமய இடைநிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலுப்பவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்திற்கு குறைந்த வருமானம் கொண்ட குடும்பம் அல்லது B40 குழுவைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த உதவிக்கு விண்ணப்பிக்க மாணவரின் அடையாள அட்டை நகல், பெற்றோரின் அடையாள அட்டை நகல் மற்றும் சம்பள சரிபார்ப்பு நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

உடனே, இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும், காரணம் 400 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


Pengarang :