NATIONAL

விளையாட்டு துறையில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில், ஜியோங்கிடோ விளையாட்டு கவுன்சிலுடன் கைகோர்த்துள்ளது

ஷா ஆலம், பிப் 21: விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டாளர்களின் மேம்பாட்டில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் (MSNS) ஜியோங்கிடோ விளையாட்டு கவுன்சிலுடன் (GSC) கைகோர்த்துள்ளது.

தென் கொரியாவுடனான இந்த ஒத்துழைப்பு மாநில விளையாட்டு வீரர்களை தயார்ப்படுத்தும் மற்றும் ஆகஸ்ட் மாதம் சரவாக்கில் நடைபெறும் சுக்மா விளையாட்டு போட்டியில் சிறந்த முறையில் விளையாட அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் வழிநடத்தப்படும் என்றும் அதன் நிர்வாக இயக்குனர் கூறினார்.

“இந்த ஒத்துழைப்பின் மூலம், தென் கொரியா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களில் 70 சதவீதத்தை வெற்றிகரமாக உருவாக்கிய மாநிலமாக திகழும் ஜியோங்கிடோவுக்கு நாங்களும்  விளையாட்டு வீரர்களை பயிற்சிக்கு அனுப்ப முடியும்.

“இதற்கு முன், நாங்கள் சியோலுக்குச் சென்று அவர்களிடம் உள்ள பயிற்சி திறன், உபகரணங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை கண்டறிந்தோம் காரணம் எந்தவொரு ஒத்துழைப்பையும் நிறுவுவதற்கு முன்பு இது போன்ற நடவடிக்கை முக்கியம்.

“மேலும்,  ஜியோங்கிடோவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் சிலாங்கூரில் உள்ள விளையாட்டு வசதிகளைப் பயிற்சிக்குப் பயன்படுத்தலாம்” என்று முகமட் நிஜாம் மர்ஜுகியைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவரும் ஜிஎஸ்சி தலைவர் லீ வோன் சுங்கும் நேற்று எம்எஸ்என்எஸ் தலைமையகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதில் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் தலைவர் நஜ்வான் ஹலிமியும் கலந்து கொண்டார்.

அடுத்த மே மாதம் ஜியோங்கிடோவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் பல தனிப்பட்ட நிகழ்வுகளையும் அவரது தரப்பு பரிசீலித்து வருகிறது என்றார்.


Pengarang :